Vodafone Idea நிறுவனத்தின் நிலுவையை மறுபரிசீலனை செய்ய அனுமதி.!

Advertisements

” Vodafone idea ” நிறுவனத்திடம் இருந்து சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய் நிலுவையைப் பெறுவதை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஓடபோன் ஐடியா நிறுவனம் 2016 – 2017 நிதியாண்டு வரை சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாயாக மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறைக்கு 5606 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருந்தது.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.  அதில் தங்கள் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், நிறுவனத்தில் அரசின் பங்குகள் உள்ளதாகவும் கூறியுள்ளதுடன் 2020 வழிகாட்டு நெறிகளின்படி அதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

ஓடபோன் ஐடியா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று இதை மறுமதிப்பீடு செய்ய உடன்பட்டு அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை கோரியது.

அப்போது ஓடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளில் 49 விழுக்காட்டை அரசு வைத்திருப்பதாலும், அதன் 20 கோடி வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் மறுமதிப்பீட்டுக்கு அனுமதி அளிக்கும்படி கோரியது.

அரசின் கொள்கை முடிவை ஏற்றுக்கொண்டு ஓடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலுவைத் தொகை குறித்து மறுமதிப்பீட்டுக்கு அனுமதி அளிப்பதாகத் தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன், பஞ்சோலி ஆகியோர் தெரிவித்தனர்.

இதையடுத்துத் தேசியப் பங்குச்சந்தையில் ஓடவோன் ஐடியா நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஒன்பது விழுக்காடு அதிகரித்து பத்து ரூபாய் 47 காசுகளாக இருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *