
திமுகவில் இணைந்த சத்யராஜ் மகளுக்குப் பொறுப்பு!
கடந்த மாதம் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவிற்கு, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பலருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
கட்சியில் இணைந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக அவருக்கு முக்கிய பொறுப்பை திமுக தலைமை அளித்துள்ளது. திவ்யா சத்யராஜுக்கு திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
