Summer Drinks: கூல் டிரிங்க்ஸ் குடிக்காதீங்க.. கோடையை சமாளிக்க ‘இத’ மட்டும் குடிச்சா போதும்!

Advertisements

கோடை காலத்தில் கூல் டிரிங்க்ஸ்க்கு பதிலாக ஆரோக்கியமான பானங்களைக் குடியுங்கள். இதன் மூலம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் மற்றும் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

தற்போது நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பலர் தங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ள குளிர்ச்சியான கூல் டிரிங்க்ஸ் குடிக்கிறார்கள். இவை உடல் சூட்டைக் குறைப்பதோடு குளிர்ச்சியையும் தரும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதில் அப்படி ஏதுமில்லை என்பதுதான் உண்மை.

ஆம். கூல் டிரிங்க்ஸ் குடித்தால் கொஞ்ச நேரம் மட்டுமே உங்களைக் குளிர்ச்சியாக வைக்கும். மேலும் அவை உங்கள் ஆரோக்கியத்தை சேதப்படுத்துமாம். குறிப்பாக அவை புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்குமாம். எனவே, கோடைக்காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இவற்றிற்கு பதிலாக ஆரோக்கியமான பானங்களைக் குடிக்கலாம். அவை.

தேங்காய் தண்ணீர்: கோடையில் தேங்காய் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது உடலுக்குப் புத்துணர்ச்சியை கொடுக்கும். அதுமட்டுமின்றி, இந்த நீர் உங்கள் உடலையும் ரீஹைட்ரேட் செய்கிறது.

பழச்சாறு: கோடை காலத்தில் ஏதாவது ஒரு பழத்தின் ஜூஸ் குடிக்கலாம். உதாரணமாக, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை குடிக்கலாம். காரணம் பழங்களில், பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். மேலும் இவை உடலை நீரேற்றமாக வைக்கும்.

எலுமிச்சை சாறு: கோடையில் எலுமிச்சை சாறு கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். ஏனென்றால், அது சூரிய ஒளியிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, உங்களைப் புத்துணர்ச்சியாக உணர வைக்கும். அதுமட்டுமின்றி, இது செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். முக்கியமாக இந்த ஜூஸில் சர்க்கரை போட்டுக் குடிக்காதீங்க.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *