
சங்கரன்கோவில் அருகே கட்டிடத் தொழிலாளர் ஒருவர் காதல் விவகாரம் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிதம்பரம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி சகாயம் என்பவரது மகன் மணிராஜ், இவர் கடந்த சில வருடங்களாகக் கழுகுமலை குமரேசன் நகரில் வசித்து வரும் நிலையில் மணிராஜ் கழுகுமலையில் கட்டிடத் தொழிலில் உதவியாக வேலை செய்து வந்துள்ளார்.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். மணிராஜ் உறவினர்கள் அந்தப் பெண்ணுக்கும் உனக்கும் தங்கச்சிமுறையாக உள்ளது இதனால் காதலை விட்டுவிட வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாகக் காதலித்த பெண்ணுடன் மணிராஜ் மாயமானார்.
பின்பு உறவினர்கள் மணிராஜ் தொடர்பு கொண்டு பேச்சு பேச்சுவார்த்தையின் மூலம் திரும்ப வருமாறு அழைத்துள்ளனர். திரும்பி வந்ததும் நல்ல நாட்கள் வரும்போது திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி இருவரையும் பிரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அவரது பூர்வீக கிராமமான சிதம்பரா புறத்தில் உள்ள வீட்டில் மணிராஜ் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மணிராஜின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
கட்டிடத் தொழிலாளர் ஒருவர் காதல் விவகாரம் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


