
திருக்கோவிலூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கனகனந்தல் சாலையில் உள்ள அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த அரசு மதுபான கடையின் பின்புறம் இன்று காலை அவ்வழியாக இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்ற சிலர் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டுத் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முகம் மற்றும் தாடை பகுதிகளில் 35 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் கொலைசெய்யப்பட்டதும் அவர் பில்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவா என்பதையும் கண்டறிந்தனர்.
மேலும், உயிரிழந்த சிவாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையுள்ள நிலையில் உயிரிழந்து கிடந்த சிவாவின் உடலைக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையில் விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளார். சிவாவை வெட்டிக் கொலை செய்தது யார் என்பது குறித்து தனிப்படை அமைத்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஆண்டும் இதே போல இந்தப் பகுதிக்கு அருகாமையிலேயே சிறுவன் ஒருவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

