
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மணல் சிற்ப நிகழ்ச்சி கடற்கரை சாலையில் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மணல் சிற்ப நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில், காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் மூவரின் உருவத்தை மணல் சிற்பமாக பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் செதுக்கி வைத்தனர்.
மேலும் , கைத்தறி பொருட்களை நிர்வாகிகளுக்கு காதி ஆடைகளை பாஜக மாநில தலைவர் இராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது சொந்த செலவில் வழங்கினர்.
இதில், மணல் சிற்ப நிகழ்ச்சியை பாஜக சார்பில் மாநில கலாச்சார பிரிவு அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம், மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்




