இந்தியப் பொருட்களை முடக்கும் அமெரிக்கா..!

இந்திய பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் அமெரிக்காவிற்கு எதற்கு பிரதமர் ஆதரவு அளிக்கிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுதா வினவியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பானு சேகர் தலைமையில், பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார்,  நாடாளுமன்ற உறுப்பினர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர். அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய தேசய விவசாயிகளின் உரிமையை அமெரிக்காவிடம் விற்றது குறித்தும், இந்திய எல்லைகளை சைனா ஆக்கிரமிப்பு செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் ராகுல்காந்தி பேச வாய்ப்பு கேட்டபோது மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்திய பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் அமெரிக்காவிற்கு எதற்கு பிரதமர் ஆதரவு அளிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *