டெல்லிக்குத் தமிழ்நாடு தலை வணங்காது..!

Advertisements
டெல்லிக்குத் தமிழ்நாடு தலை வணங்காது, தமிழ்நாடு தலை நிமிர்ந்து தான் நிற்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் திமுக சார்பில் தேர்தல் பரப்பரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் பெரிய கூட்டணி அமைந்துவிட்டது போல் பந்தா பண்ணிக் கொள்கிறார்கள். இதே கூட்டணி தான் 2021 இல் இருந்தது.
ஆனால், அப்போது திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என்று சுட்டி காட்டினார். தொடர்ந்து, டெல்லிக்குத் தமிழ்நாடு தலை வணங்காது என்றும், தமிழ்நாடு தலை நிமிர்ந்து தான் நிற்கும் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *