சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிப்பு!

Advertisements

சென்னை- திருவள்ளூர் இருமார்க்கத்திலும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாகப் பணி நிமித்தமாகத் திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு அதிகளவில் பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலிலிருந்து பெரம்பூர், ஆவடி வழியாகத் திருவள்ளூர் செல்லும் மார்க்கத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாகப் புறநகர் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரெயில்கள் குறிப்பிட்டப்பட்ட அட்டவணைப்படி இயக்கப்படவில்லை எனவும் மின்சார ரெயில் வழக்கத்தைக் காட்டிலும் 20 முதல் 30 நிமிடம்வரை தாமதமாக இயக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *