இன்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

Advertisements

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூரில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

இதற்காகத் தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. கரிச்சான், பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான்சிட்டு, வான் சிட்டு, புள்ளிமான், இளஞ்ஜோடியெனப் பல்வேறு பிரிவுகளில் மாடுகள் கலந்து கொண்டன.

சின்னமனூர் மேகமலை சாலையில் சுமார் 5 கி.மீத்தூரம் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. காளைகள் சீறிப்பாய்ந்தபோது சாலையில் இரு புறமும் நின்று பொதுமக்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த காளைகளுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டியைக் காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சின்னமனூர் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

முன்னதாக இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டி தேனி தெற்கு மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காசிராஜன், இணைச் செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

அ.தி.மு.க. நகர செயலாளர் பிச்சைக்கனி கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் நகரின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *