தமிழகத்தில் புயல் கூண்டு ஏற்றம் !

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் 9 துறைமுகங்களிலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 880 கி.மீ. தூரத்திலும் சென்னையின் தெற்கு தென்கிழக்கே 1,050 கி.மீத்தூரத்தில் உள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் இன்று இரவு முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29-ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கையாகச் சென்னை, கடலூர் நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *