நாட்டின் உயரிய பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காமகோடி, இராமசாமி, மயிலானந்தன், மாதவன் உள்ளிட்டோருக்குப் பத்ம விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கும் விழா தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் , மலையாள நடிகர் மம்மூட்டி, இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி அல்கா யக்னி, தொழிலதிபர் எஸ்கேஎம் மயிலானந்தன் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிச் சிறப்பித்தார். மேலும்,

திரைத்துறையைச் சேர்ந்த நூருத்தீன் அகமது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா, பிரசார் பாரதி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், தற்போதைய மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவருமான சசிசேகர் வேம்பதி, தமிழ்த் திரைப்பட நடிகர் மாதவன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, வேளாண்துறையில் உயிரி உரங்கள் நுண்ணுயிரி ஆராய்ச்சியில் பங்களிப்புக்காகப் பேராசிரியர் இராமசாமி, பத்ம ஸ்ரீ விருதைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிச் சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *