Advertisements

வருகிற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் 1800 ரூபாய் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்தல் என்றால் ஏதாவது இலவச பொருள் அல்லது கையூட்டு பணம் கிடைக்குமா என்று எதிர்பார்க்க தொடங்கி விட்டார்கள்.
அந்த வகையில் முந்தைய ஆட்சி காலங்களில் இலவச தொலைக்காட்சி இலவச மிக்சி மின்விசிறிகள் கிரைண்டர்கள் வழங்கப்பட்டன
கடந்த தேர்தலில் திமுக பிரச்சாரத்தின்போது நாங்கள் வெற்றி பெற்றால் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பெண்களில் பெரும்பான்மையான ஓட்டுக்கள் திமுகவுக்கு கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது .இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் வருகிற தேர்தலுக்குப் பிறகு ஆயிரம் ரூபாய் நிலைமை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது அடுத்த கட்டமாக 2000 ரூபாய் தருவார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 1500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தற்போது எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற போர் குரலுடன் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார் முதல் கட்டமாகக் கொங்கு மண்டலத்தில் அவரது பிரச்சார பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .விழுப்புரம் அருகே உள்ள வானூரில் உள்ள திருச்சிற்றம்பலம் 4 மணி சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்பொழுது கடந்த முறை திமுக தரப்பில் தேர்தல் அறிக்கையாக 524 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆனால் அதில் பெரும்பாலான கோரிக்கைகளைத் திமுக அரசு நிறைவேற்றவில்லை மகளிர் உரிமைத் தொகையைப் பொருத்தவரையில் 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 25 மாதங்கள் கழித்து அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாக மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் இதேபோல் வருகிற தேர்தல்வரை மட்டுமே பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் அதன் பிறகு தரமாட்டார்கள் .ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மனநிறைவு பெறும் வரை உதவித்தொகை கொடுக்கப்படும் அது மட்டுமல்லாமல் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் 1500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.தற்பொழுது திமுக தரப்பில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வரும் நிலையில் அதிமுக தரப்பில் 1500 ரூபாயென அறிவித்திருக்கிறார்கள் அடுத்த கட்டமாக விஜய் தரப்பில் எவ்வளவு ரூபாய் தருவார்கள் எனப் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்
Advertisements



