கசாவில் இஸ்ரேலின் நடத்திய கொடூர தாக்குதலில், ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது.

நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பு சிறை பிடித்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து காசாவிற்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், இதுவரை 54-ஆயிரத்து 772 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். ஒரு லட்சத்து 25-ஆயிரம் பேர்  காயமடைந்தனர் என  காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் முழு அளவில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், நிவாரண உதவி பெறுவதற்காக, காத்திருந்த 8 பாலஸ்தீனியர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில், ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்தனர். இது இனப்படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காசா நிவாரண உதவிக்கான அறக்கட்டளை, அதன் பணியை தொடங்கியதிலிருந்து, அதனை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *