நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு பேசும் பெண்கள் மற்றும் திராவிடர்கள்குறித்து அவதூறு பரப்பும் விதமாக நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்காக அவர்மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் புகார் கொடுத்ததன் பேரில் மதுரை திருநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கைதிலிருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் இவர் கைது செய்யப்பட்டு நேற்று சென்னை அழைத்து வந்த காவல்துறை. சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை முடித்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த மாதம் 29ஆம் தேதிவரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *