
தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பிரபல தனியார் பேக்கரியில் பழைய காலாவதியான பிரட், கூல் ட்ரிங்ஸ், மசால் கடலை, வடை, போண்டா, மற்றும் பலகாரம் செய்வதற்காகப் பயன்படுத்திய பழைய எண்ணை ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்தப் பொருள்களின் மீது பினாயில் ஊற்றிக் கெட்டுப்போன பொருட்களை அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்குழுவினர் பூக்கடைக்காரர், பெரிய கடை வீதி, பகுதிகளில்செயல்பட்டு வரும் பேக்கரிகள் மற்றும் குளிர்பான கடைகளைத் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பெரிய கடைவீதியில் உள்ள பிரபல தனியார் பேக்கரியில் பழைய காலாவதியான பிரட், கூல் ட்ரிங்ஸ், மசால் கடலை, வடை, போண்டா, மற்றும் பலகாரம் செய்வதற்காகப் பயன்படுத்திய பழைய எண்ணை ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்தப் பொருள்களின் மீது பினாயில் ஊற்றிக் கெட்டுப்போன பொருட்களை அளித்தனர்.
மேலும் கடை உரிமையாளருக்குஅபராதம், விதித்து எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் கூல் ட்ரிங்ஸ் கடை ஒன்றில் நிறமூட்டப்பட்ட பழச்சாறுகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லலிதாம்பிகை குடித்து பார்த்துச் சுவை நிறம் மணம் , போன்றவற்றின் தன்மைகளை ஆய்வு மேற்கொண்டார், அப்போது செயற்கை நிறம் மூட்டியை பயன்படுத்தி பழசாறு தயாரித்த கூல்டிரிங்ஸ் விற்பனை நிலையத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கினார்.
மேலும் சிப்ஸ் கடை ஒன்றில் ஆய்வு செய்த அதிகாரிகள் அக்கடையில் உள்ள சிப்ஸ் பாக்கெட் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ் எடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான லைசென்ஸை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உடனடியாக அபராதத்துடன் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும் உணவு சார்ந்த கலப்படம், தரம் குறைவு போன்ற புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

