வரியின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் போரை தடுத்தேன் : டிரம்ப் பரபரப்பு பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரை வரியின் மூலம் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பேசிய அவர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீவிரமாக நடைபெற்ற போரின்போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஆனால், இந்த கூற்றை இந்தியா மறுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது அதிபர் பதவிக்காலத்தில் எட்டு போர்களை நிறுத்தியதாகவும், உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு ஒப்பந்தத்தை செய்ய விரும்பியதாகவும் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, நீங்கள் போருக்குச் சென்றால், 250 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என்று இரு தரப்பினரிடமும் தான் கூறியதாகத் தெரிவித்தார்.
ஒரு நாள் கழித்து அவர்கள் தன்னை அழைத்து, ‘நாங்கள் போருக்கு செல்லமாட்டோம்’ என்று கூறியாகத் தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *