Salem Muttal Park: மயிலைத் துரத்தித் துரத்திக் கடித்து குதறிய நாய்கள்!

ஆத்தூர் அருகே முட்டல் வனப்பகுதியிலிருந்து இறைத்தேடி விவசாய தோட்டத்திற்கு வந்த ஆண் மயிலை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தது. உடனடியாகப் பொதுமக்கள் ஆண் மயிலைப் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் வனப்பகுதியில் மான், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் இருந்து வருகிறது,

மேலும் இந்த வனவிலங்குகளுக்கு அதற்குப் போதிய உணவில்லாததால் வனப்பகுதியின் வெளியே உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று இறைதேடி வரத்தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை முட்டல் வனப்பகுதியிலிருந்து ஆண் மயில் ஒன்று இறைதேடி வனப்பகுதியிலிருந்து விவசாய நிலப்பகுதிக்கு வந்தது, அப்போது அதே பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் இறைத்தேட வந்த ஆண் மயிலைத் துரத்திக் கடித்து குதறியது, இதையறிந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாய்களைத் துரத்திக் காயமடைந்த ஆண் மயிலை மீட்டு ஆத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், மேலும் அந்த மயிலுக்கு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இது போன்று வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனபகுதியிலிருந்து இறை தேடியும் தண்ணீர் தேடியும் ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் வனப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *