SP வேலுமணி அணியைச் சேர்ந்த 5MLA – க்கள் இபிஎஸ் உடன் சந்திப்பு..!

Advertisements

அதிமுகவில் உட்கட்சி அரசியல் சூழல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி ஆதரவு அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசுவது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

நேற்று 5 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் அவர்களைச் சந்தித்துப் பேசிய நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றும் அதே அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பைத் தொடர்ந்தனர்.

 நத்தம் விஸ்வநாதன், திருத்தணி ஹரி, புவனகிரி அருண்மொழித்தேவன், பழனி தொகுதி எம்.எல்.ஏ. ரவி மனோகரன் மற்றும் ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

 எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து இபிஎஸ் அவர்களைச் சந்திப்பது, அதிமுகவின் உள்விவகாரங்களில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களையும், கட்சியின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *