சீமான் 4-வது இடம்;  விஜயலட்சுமி – வீரலட்சுமி சதி: நிர்வாகிகள் விலகல்..!

Advertisements
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் சீமான் கட்சிக்கு கடைசி இடம் கிடைக்கும் என்று பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது . இது மட்டுமல்ல நடிகை விஜயலட்சுமி தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி ஆகிய இருவரும் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக வருகிற தேர்தலில் களம் இறங்குகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .
தமிழக அரசியல் கட்சிகளில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறது . சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. விவசாயி சின்னம் முதல் ஏராளமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி கடந்த காலங்களில் ஓரளவு வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.
சீமானின் அதிரடி பேச்சுக்கள் தமிழக நலன் சார்ந்த திட்ட அறிவிப்புகள் அதற்கான தீர்வுகள் என மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது . நாம் தமிழர் கட்சி. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.  கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது . தேர்தல் முடிவில் 1.1 சதவீத வாக்குகளை பெற்றது ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை .
இதேபோல் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது.  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை இதில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5.5 சதவீத வாக்குகளையும் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் 3.7 சதவீத வாக்குகளையும் பெற்றது.
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இருந்தபோதிலும் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் சீமான் கட்சி வெற்றி பெறவில்லை. இதுவரை பல தேர்தல்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சீமான் அறிவித்திருக்கிறார்.  இது தொடர்பாக 50 வேட்பாளர்களை தேர்வு செய்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
வழக்கம்போல 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள் 117 தொகுதிகளில் பெண் வாப்பாளர்கள் நிறுத்தப்பட இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் சீமான் கட்சி குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆய்வுகள் நடத்தியுள்ளன. இந்த ஆய்வுகளின் படி வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் சீமான் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற வேட்பாளர் தேர்வில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக நாம் தமிழர் நிர்வாகிகள் திரை மறைவில் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சீமான் தனது இஷ்டம் போல் தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் . எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அந்தப் பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகளுக்குத்தான் தெரியும் .  இதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன ஆனால் சீமான் அது தெரியாமல் பிடிவாதமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
குறிப்பாக வருகிற தேர்தலில் சாதி ரீதியாக வேட்பாளர்களை நிறுத்த போவதாக பேசப்படுகிறது. எந்த தொகுதியில் என்ன ஜாதியினர் அதிகமாக இருக்கிறார்களோ அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நாம் தமிழர் தொண்டர்கள் மனக்குமுறலில் இருக்கிறார்கள் . அவர்கள் வரிசையாக கட்சியை விட்டு விலகுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
இது நாம் தமிழர் சீமானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இது மட்டுமல்லாமல் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் மீதான அந்தஸ்து குறைவடைந்த நிலையில் தேர்தல் களத்தில் நடிகை விஜயலட்சுமியின்பேச்சு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இதேபோல் தமிழர் முன்னேற்ற படை தலைவரான வீர லட்சிமியும்  தனிப்பட்ட முறையில் சீமானுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்குவார் என தெரிகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் சீமானுக்கு எதிராக தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி மாவட்டம் தோறும் கூட்டம் போட்டு பேசுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். ஏற்கனவே வீரலட்சுமி சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருவது குறிப்பிடத்தக்கது
இதன் பின்னணியில் திமுக செயல் படுவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுவல்லாமல் சமீபகாலமாக நாம் தமிழர் சீமான் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை குறி வைத்து காரசாரமாக பேசி வருகிறார் . இது மட்டுமல்லாமல் அவரது பேச்சு நாகரீகமாக அமையவில்லை மிக மோசமாக நடந்து கொள்கிறார் என்ற கருத்தும் தற்பொழுது மக்கள் மத்தியில் ஏழத் தொடங்கி இருக்கிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் 4 முனை போட்டி நிலவும் சூழ்நிலை இருக்கிறது. .அந்த வகையில் நாம் தமிழர் கட்சி கடைசி இடத்திற்கு தள்ளப்படும் என்கிறார்கள். வருகிற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் சூழ்நிலை இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் பேசப்படுகின்றன
இதற்கு முந்தைய தேர்தல்களில் நாம் தமிழர் மகளிர் பாசறை தலைவியாக இருந்த காளியம்மாள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். தற்பொழுது , அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வருகிற தேர்தலில் நாம் தமிழர் சீமான் மட்டுமே பிரச்சாரம் செய்யும் சூழ்நிலையில் இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மனை நீக்கியதும் கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் கடந்த தேர்தல்கள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெற்றதில்லை என்பதால் வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
திமுக அதிமுக தமிழக வெற்றி கழகம் ஆகிய அரசியல் கட்சிகள் வருகிற தேர்தலில் ஏராளமாக செலவு செய்யும் பட்சத்தில் தேர்தல் செலவுகளை வேட்பாளர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இதனால் வேட்பாளர் தேர்வில் இந்த முறை மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தமிழர் சீமான் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார் என்ற பரிதாப கேள்விகள் எழுந்துள்ளன.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *