உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? வெளியூர் வேட்பாளர் வேண்டுமா? – எஸ்.பி.வேலுமணி.!

கோவையில் உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் வேட்பாளர்கள் வேண்டுமா? என்று அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவை தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குச் சேகரித்தார். அப்போது கோவையில் அதிகப்படியான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியது சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் என்றும், திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுக் காலமாகக் கோவையில் எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் உள்ளூர்க்காரர் என்றும், திமுக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் வேட்பாளர்கள் என்றும் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *