தேசிய பழங்குடியினர் ஆணையக் குழு முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை..!

தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் (NCST) தலைவர் அந்தர் சிங் ஆர்யா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்பின் போது, தமிழகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், சமூக-பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் குறித்தும், பழங்குடியின மக்களுக்காக அரசு நடைமுறைப்படுத்தி வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: பழங்குடியின மாணவர்களின் மேல்நிலைக் கல்வி சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.

மலை மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களுக்குத் தேவையான தாரை சாலைகள், குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்துதல். நில உரிமைகள்: பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான வன உரிமைச் சான்றிதழ்கள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.

ஆணையத்தின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பாதுகாப்பையும், அவர்களின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டையும் அரசு முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுத்தும் என்று உறுதி அளித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது துறை சார்ந்த உயர் அதிகாரிகளும், அரசு செயலர்களும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *