பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு!

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல வசதியாகக் கூடுதலாக 2 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 10ம் தேதி மைசூரிலிருந்து சேலம், திண்டுக்கல் வழியாகத் தூத்துக்குடிக்கும், மறு மார்க்கத்தில் 11ம் தேதி மைசூருக்கும் இயக்கப்படுகிறது.

10ம் தேதி பெங்களூரிலிருந்து காட்பாடி வழியாகச் சென்னை சென்ட்ரலுக்கும், மறு மார்க்கத்தில் அதே நாளில் பெங்களூருவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே 5 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இயக்கத் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் பயன்பெறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *