
ஏமன் உள்நாட்டுப் போரின் போது பிடிப்பட்ட 2,700 கைதிகளை விடுவிக்க ஏமன் அரசும், ஹவுதி பயங்கரவாத அமைப்பும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஏமனில், சவுதி அரேபிய ஆதரவிலான கூட்டணி அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2014 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிர்மாய்க்கம் செய்யப்பட்டனர்.மேலும், ஏராளமானவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தின் கீழ் ஏமன் அரசுக்கும் – ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் இடையே 12 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஹவுதி தரப்பில் இருந்து 1,700 கைதிகளையும், அரசு தரப்பில் இருந்து 1,200 கைதிகளையும் விடுவிப்பது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில் இது மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது.


