Advertisements

தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நடப்பு ஆட்சி முடிவுக்கு வருகிறது இதனை தொடர்ந்து தேர்தல் களம் இப்பொழுதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது . எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்ற பட்டியல் ஒரு பக்கம் வேகமாக தயாராகி வருகிறது.
அதே சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து அரசு உளவுத்துறை தவிர தற்பொழுது ஒவ்வொரு கட்சிகளும் தனிப்பட்ட முறையில் ஆய்வுகள் நடத்தி வருகின்றன . அந்த வகையில் தென் மாவட்டத்தை பொருத்தவரையில் மொத்தம் 58 தொகுதிகள் முக்கிய தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன .
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு வடக்கு மத்தி மேற்கு மேலூர் திருப்பரங்குன்றம் சோழவந்தான் திருமங்கலம் உசிலம்பட்டி என பத்து தொகுதிகள் இருக்கின்றன. இந்த பத்து தொகுதிகளில் திமுக ஆறு இடங்களை கைப்பற்றும் அதிமுக நான்கு இடங்களை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது .
தேனி மாவட்டத்தை பொருத்தவரையில் , ஆண்டிப்பட்டி பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் என நான்கு தொகுதிகள் உள்ளன . இதில் திமுக மூன்று தொகுதிகளை கைப்பற்றும் அதிமுக ஒரு இடத்தை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது . திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் , நிலக்கோட்டை , நத்தம், திண்டுக்கல் , வேடசந்தூர் என ஏழு தொகுதிகள் உள்ளன. இதில் நான்கு இடங்கள் அதிமுகவுக்கு கிடைக்கும் மூன்று இடங்கள் திமுகவுக்கு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது .
இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை , மானாமதுரை என நான்கு தொகுதிகள் உள்ளன . இந்த நான்கு தொகுதிகளில் அதிமுக முழுமையாக தோல்வியை தழுவும் திமுக மூன்று இடங்களில் வெற்றி பெறும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டுவிட்டால் ஒரு இடத்தில் வெற்றி பெறும் என தெரிகிறது .
ராமநாதபுரத்தை பொறுத்தவரையில் இந்த மாவட்டத்தில் பரமக்குடி , திருவாடானை , ராமநாதபுரம் , முதுகுளத்தூர் என நான்கு தொகுதிகள் உள்ளன இந்த நான்கு தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது . விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் , சாத்தூர் , சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை என்னை ஏழு தொகுதிகள் உள்ளன. இதில் 5 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தென்காசி வாசுதேவநல்லூர் ஆலங்குளம் கடையநல்லூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன . இதில் மூன்று இடங்களில் திமுக வெற்றி பெறும் இரண்டு இடத்தில் அதிமுக வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது . திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் என ஐந்து தொகுதிகள் உள்ளன . இதில் நான்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் , தூத்துக்குடி , திருச்செந்தூர் , ஸ்ரீவைகுண்டம் ,,ஓட்டப்பிடாரம் கோவில்பட்டி என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் 5 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு , கிள்ளியூர், கன்னியாகுமரி என ஆர் தொகுதிகள் உள்ளன .இதில் நான்கு தொகுதிகளில் திமுகவும் இரண்டு தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெறும் என தெரிகிறது .
ஒட்டுமொத்தமாக தென் மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் திமுக 39 தொகுதிகளிலும் அதிமுக 18 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் வருகிற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது .
அதேசமயம் ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிமுக திமுக இடையிலான வாக்கு வங்கி விகிதம் மிக குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளர் என இருவரையும் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 1000 வாக்குகள் முதல் 3000 வாக்குகள் வரை குறைந்தபட்ச வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது .
எனவே அதிமுகவை பொறுத்த வரையில் இன்னும் பலமான கூட்டணிகள் அமைத்தால் தென் மண்டலத்தில் மக்கள் கருத்துக்கணிப்பில் மாற்றம் இருக்கலாம் என்பதும் முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது.
Advertisements





