Sonia Gandhi: பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Advertisements

பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு! சோனியா காந்தி…

இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்.

அதில் மிசோரம் மாநிலத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்கி உள்ள சோனியா காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பழங்குடி மக்களுக்கு உள்ள உரிமைகளை பறிக்கும் வகையிலான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதாகவும் மிசோரம் மாநில எம்பியை கூட ஒன்றிய, பாஜக அரசு அனுமதிப்பது இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் பன்முகத் தன்மையை மதிக்காமல், ஒற்றை தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாகவும் சோனியா காந்தி சாடி உள்ளார். மணிப்பூர் 6 மாதங்களாக பற்றி எரியும் நிலையில், தீர்வு காண்பதற்கான எந்த முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மிக மோசமான அமைதி காப்பதாகவும் மணிப்பூர் செல்லக் கூட அவர் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலத்தை ஆளும் மிசோ தேசிய முன்னணியும் ஜோரம் மக்கள் இயக்கமும் பாஜகவின் பினாமிகள் போல செயல்படுவதாகவும் அக்கட்சிகளுக்கு வாக்களித்து, பரிசோதித்து பார்ப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *