Mekedatu Dam: டி.கே. சிவகுமார் திட்டவட்டம்!

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணைகட்டப்படும் கர்நாடக துணை  முதலமைச்சர் டி.கே. சிவகுமார் திட்டவட்டம்!

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் 100 சதவீதம் கண்டிப்பாக அணை கட்டியே தீருவோம் என மாநில துணை  முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே .சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் நீண்ட நாள் திட்டமான மேகதாது அணை கட்டும் பணியினை வெகு விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வரத்து இரு மாநிலங்களுக்கும் பயன்படுத்தியது போக மீதமுள்ள நீரானது வீணாக ஆற்றில் கலக்கிறது. இந்த தண்ணீரை சேகரித்து வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த மேகதாதுவில் அணைகட்ட வேண்டிய அவசியத்தில் கர்நாடகா அரசு உள்ளது. அதனால் மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அணை கட்டியே தீருவோம் இதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *