Advertisements

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ் சிவங்கர் என்பவர் முன்னாள் திமுக அமைச்சர். இவர் 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார்..
இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசு பேருந்து சேவைகளை மேம்படுத்துதல், புதிய பேருந்துகள் கொள்முதல் மற்றும் அறிமுகம், மின்சார பேருந்துத் திட்டங்களை முன்னெடுத்தல், போக்குவரத்துக் கழகங்களில் பணியாளர் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் சிவசங்கர் 87 ஆயிரத்து 237 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரண்யாவை தோற்கடித்து 15 ஆயிரத்து 557 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் பணியாற்றி வருகிறார்.
2026 தேர்தல் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்பட்ட சுய அறிவிப்பின்படி மொத்த சொத்து: சுமார் ₹18.18 கோடி கடன்: சுமார் ₹2.57 கோடி
3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் குற்ற வழக்கில் ஆதாரத்துடன் சிக்கி கொண்டார் அவர் சிக்கி கொண்டதன் பிண்ணணியை பார்க்கலாம்..
அதாவது திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அந்த புகாரை ஓய்வுபெற்ற சார்பு உதவியாளர் சீனிவாசன் என்பவர் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸ்சார் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதன் முதற்கட்ட அறிக்கையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
அதிலும் 23 லட்சம் மோசடி செய்திருப்பதாக கடந்த 24 ம் தேதி சிவசங்கர் உதவியாளர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார். உதவியாளர் இளஞ்செழியன் அளித்த வாக்கு மூலத்தில் சிவசங்கர் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் உதவியாளர் யார் என்றே தெரியாது என்று கூறியிருக்கிறார். ஆனால் இளஞ்செழியன் கூறுகையில் சிவசங்கர் தனது தாயின் ஆசியராக இருந்தவர் என்று அதன் மூலம் தொடர் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
ஆக இதில் திள்ளு முள்ளு நடந்திருக்கிறா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.. முன்னாள் அமைச்சர் உண்மைவாதியா அல்லது ஊழல் வாதியா என்பதை சட்டத்தின் முன் தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் சாணக்கியர்கள்..
Advertisements




