G20 Summit: மண்டபத்தில் நடராஜர் சிலை!

Advertisements

 ஜி20 மாநாடு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளைக் கண் முன்னே நிறுத்துகிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்…

புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9,10ம் தேதி நடைபெற உள்ள ஜி-20 மாநாடு அரங்கத்தின் முகப்பில், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையைச் சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில், அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.

ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *