
சீர்காழி அருகே அரசு பேருந்தின் பின்புற சக்கரங்கள் கழண்டதால் பயணிகள் அச்சம் அடைத்துள்ளனர்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளது. அப்போது சீர்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தின் பின்பக்க பேரிங் உடைந்ததால் வலது பக்கம் பின்புறம் உள்ள இரண்டு சக்கரங்கள் வெளிவந்தது .
இதனால் பலத்த சத்தம் ஏற்பட்டதை உணர்ந்த பேருந்தில் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் அலறி கூச்சல் விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் காயம் இன்றி தப்பினர்.
பல உயிர்கள் பயணிக்கும் அரசு பேருந்தின் பாகங்கள் எவ்வாறு இருக்கிறது என அவ்வப்போது சோதனை செய்யப்படாததே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது .


