பனிக்கரடியுடன் மனைவியை மீட்ட கணவர்!

கனடாவின் போர்ட் செவன் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தங்கள் வளர்ப்பு நாய்களைத் தேடி வீட்டின் வெளியே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு பனிக்கரடி பெண்மீது பாய்ந்து தாக்கி உள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் கணவர், கரடிமீது பாய்ந்து அதனிடமிருந்து தனது மனைவியை மீட்க போராடினார். அப்போது கரடி அவரைக் கடித்து காயப்படுத்தியது. இதில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடவும், கரடி அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓடியது. காயம் அடைந்த தம்பதியினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *