வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு.!

Advertisements

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறித்து வெற்றி பெறலாம் என அதிமுகவும், பாஜகவும் தப்புக் கணக்கு போடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் SIR- பணியை தொடங்குவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பிகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மூலம் 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிலும் அதே குறுக்கு வழியைப் பின்பற்ற பாஜக அரசு தனது கைப்பாவையான தேர்தல் ஆணையத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை SIR மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜகவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுவதாக முதலமைச்சர் ஸ்டாலிம் குற்றஞ்சாட்டினார்.

நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்து வெற்றி பெறலாம் எனப் போடும் கணக்கு, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத் தான் ஆகும் என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *