Humsafar Express: ரெயிலில் திடீர் தீ விபத்து!

Advertisements

திருச்சியிலிருந்து குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது…

குஜராத் மாநிலத்தின் வால்சத் ரெயில் நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீப்பிடித்தது. ரெயில் பெட்டியிலிருந்து தீ வெளியேறுவதை பார்த்ததும், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாகக் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகெலா தெரிவித்து உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *