
வாக்காளர் சிறப்பு தீவரத் திருத்தம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை மேற்கொள்வதற்குத் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி மூலம் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.



