
அங்கோலா நாட்டில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து, தலைநகர் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாலை அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டா சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை யடுத்து, அங்கோலாவின் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். அங்கோலா நாட்டின் 50-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்கிறார்.
பின்னர் அந்நாட்டின் நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார். இதன் பின்னர், ஜனாதிபதி முர்மு போட்ஸ்வானா நாட்டிற்கு சென்று போட்ஸ்வானா ஜனாதிபதி டுமா டிகொன் பொகோவை சந்திக்கிறார்.
இதனை யடுத்து, இரு நாட்டின் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி முர்மு வரும் 13 ஆம் தேதி நாடு திரும்புகிறார்.




