ஓஹியோ மாகாண ஆளுநர் விவேக் ராமசாமிக்கு டிரம்ப் முழு ஆதரவு.!

ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் ஆளுநர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பரில் நடக்க உள்ளது. ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியும் முன்னணி தொழிலதிபருமான விவேக் ராமசாமி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், ராமசாமி ஓஹியோவின் சிறந்த ஆளுநராக இருப்பார் என்றும் அவர் தனது முழுமையான ஒப்புதலை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், விவேக் ராமசாமி சிறப்பானவர், வலிமையானவர், புத்திசாலி என்றும் அடுத்த ஆளுநராக அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அயராது பாடுபடுவார் என்றும் கூறினார். இதற்கு விவேக் ராமசாமி, அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *