எஸ்ஐஆா் விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை:அமைச்சா் கிரண் ரிஜிஜு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியப் போது, அனைத்துக் கட்சி கூட்டத்திலும், தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்துகின்ற நிலையில், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்குமாறு நிபந்தனை விதிக்க வேண்டாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தவிா்த்து பிற விவகாரங்களை சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முன்வைத்துள்ளனா். அதனை, விளக்கமளிக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று கூறிய நிலையில், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சில உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *