Shubman Gill: முதலிடம் பிடித்த இந்திய வீரர்!

Advertisements

2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின்  சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் உடன் இந்தியா விளையாடிய 10 லீக் போட்டிகள் உள்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.

7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் தான் இந்த ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்திய அணியின் இளவரசர் என்று சொல்லப்படும் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

இவர் விளையாடிய 29 ஒருநாள் போட்டிகளில் 1584 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதம், 9 அரைசதங்கள் அடங்கும். விராட் கோலி விளையாடிய 24 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 1377 ரன்கள் குவித்துள்ளார். இதில், 6 சதம், 8 அரைசதம் அடங்கும். உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 765 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

ரோகித் சர்மா 26 போட்டிகளில் விளையாடி 1255 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டுமே ரோகித் சர்மா 67 சிக்ஸர்களும், 131 பவுண்டரிகளும் விளையாசியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ரோகித் சர்மா 323 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து டேரில் மிட்செல் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் விளையாடிய 25 இன்னிங்ஸ்களில் 1204 ரன்கள் குவித்துள்ளார்.

கடைசியாக 5ஆவது இடத்தில் பதும் நிசாங்கா இடம் பெற்றுள்ளார். அவர் விளையாடிய 29 ஒருநாள் போட்டிகளில் 2 சதம், 9 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 1151 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *