
இணையத்தில் கலக்கி வரும் சமூக வலைத்தளங்கள்; பங்கேற்கும் தன்மை கொண்ட தளங்கள். இந்த இரண்டும் ‘இரண்டாம் வலை’ என்று பிரபலமாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்தப் போக்கை உணர்த்தும் தளங்கள் அதற்குச் ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் இன்றைக்குப் பிரபல சமூக வலைதளங்களாக விளங்குகின்றன.
சமூக வலைதளங்களில் யூடியூப், இன்ஸ்டா கிராம், முகநூல் போன்ற செயலிகள் இருந்தாலும், மக்கள் பண பரிவர்த்தனைக்கு ஜி-பே, பேடிஎம், போன்ற தனிப்பட்ட செயலிகள் மூலமாக மட்டுமே பணபரிவர்த்தனை நடத்த முடியும்.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சாமானிய மனிதன் உட்பட அனைவரும் சமூக வலை தளம் வாயிலாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் யூ டியூப், இன்ஸ்டாகிராம், முக நூல், ட்விட்டர் போன்றவை சேவையில் இருந்தன.
சமீபத்தில் ட்விட்டர் சேவைக்குப் பதிலாக எக்ஸ் வலைதளம் பிரபலமானது டுவிட்டருக்கு பதிலாக X வலைதளம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றினார்.
எக்ஸ் தளத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் அந்நிறுவனம் தற்போது, எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்றவுடன் அடுத்த ஆண்டில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். இதனால் மக்கள் பெரிதும் பயனடைவர் என்று எலன் மஸ்க் தெரிவித்தார்.

