
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்களும் பெங்களூரு அணியின் கேப்படன் ரஜத் படிதார் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில், குஜராத் அணி 3 முறையும், பெங்களூரு அணி 4 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. எனவே, இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.



