10 கோடி ரூபாய் டெபாசிட் : லைகா பதிலளிக்க கோர்ட் உத்தரவு.!

Advertisements

10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் அவகாசம் வழங்கலாமா? என லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், கால அவகாசம் வழங்குவது குறித்து பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 10ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *