Student Suicide: ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை!

Advertisements

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் செமஸ்டர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தக் கல்லூரியில் பயிலும் கோகுல் ராம் என்பவர் வழக்கம்போல் தேர்வு எழுதியுள்ளார். அப்போது கோகுல் ராம் தேர்வில் பிட்டு அடித்துத் தேர்வு கண்காணிப்பாளரிடம் கையும் களவுமாகச் சிக்கி உள்ளார். இந்தநிலையில் செமஸ்டர் தேர்வில் காப்பியடித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் கையும் களவுமாகச் சிக்கியதால், அவமானம் அடைந்த கோபுரம் கோகுல் ராம் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவம்குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்த அங்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல்நிலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றதால் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மாணவனின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கல்லூரியில் இந்தத் தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *