அண்ணாமலை பொறுப்பிலிருந்து விலகியது ஒரு சாதாரண விஷயம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில், பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் திமுக கடந்தத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, அண்ணாமலை பொறுப்பிலிருந்து விலகியது ஒரு சாதாரண விஷயம் என்றும், அவரது சொந்தக் காரணங்களுக்காக இந்த தற்காலிகப் பொறுப்பிலிருந்து விலகி உள்ளார் என்றும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, பேசிய அவர் விஜய் திரைப்படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் அரசியலில் கட்சி தலைவராக தகுதியை வளர்த்துக் கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், கட்சி ஆண்டு விழாவில் ஆடுவது கொள்கை என்றால் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார் என விமர்சித்தார்.

