பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை.. என்ன நடந்தது?

Advertisements

தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் , அவர்களுடைய கட்சி பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன.இந்நிலையில், அதிமுக , திமுக போன்ற கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற உத்தேச பட்டியல் கூட வெளியாகாத நிலையில், 234 தொகுதிகளுக்கு 72 தேர்தல் பொறுப்பாளர்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்தார்.

இதில் அண்ணாமலைக்கு, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம், காரைக்குடி ஆகிய 6 தொகுதிகளின் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. அதிமுகவுடனான கூட்டணி உள்பட பாஜக தேசிய மற்றும் மாநிலத் தலைமையின் பல்வேறு முடிவுகளால் அண்ணாமலை தொடர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் பரவிய நிலையில், 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமித்தது அவரை அதிருப்தியில் உச்சத்திற்கு தள்ளியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே , நயினார் நாகேந்திரனுடன் தொடக்கம் முதலே மோதல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், மாநிலத் தலைவராக இருந்த தன்னை குறுகிய வட்டத்திற்குள் அடக்கியதால் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மேல் இருந்த விமர்சனங்களுக்கு அவரே விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதில், தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் பணிகளை செய்யமுடியவில்லை என அண்ணாமலையே விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

அதேநேரம், அண்ணாமலையை பாஜக மறந்துவிட்டதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார். எனினும், தேர்தல் நேரத்தில் அண்ணாமலையின் முடிவு மாறலாம் என மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கடுமையான அதிருப்தியில் இருந்தால் அந்தக் கட்சியில் அண்ணாமலை தொடர வேண்டிய அவசியமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது என்றும் பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தனது அதிருப்தியை அண்ணாமலை வெளிப்படையாக காண்பித்துவிட்ட நிலையில் அவரை சரிகட்டுவதா? அல்லது ஓரம்கட்டுவதா? என விரைவில் டெல்லி தலைமை முடிவு எடுக்குமென அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.தனது அதிருப்தியை அண்ணாமலை வெளிப்படையாக காண்பித்துவிட்ட நிலையில் அவரை சரிகட்டுவதா? அல்லது ஓரம்கட்டுவதா? என விரைவில் டெல்லி தலைமை முடிவு எடுக்குமென அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *