வயலில் மாணவர்களுடன் இணைந்து நாற்று நட்ட அமைச்சர் சிவராஜ் சிங்!

Advertisements

உத்தரக்கண்ட் மாநிலத்தில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங், வயலில் சேற்றில் இறங்கி நாற்று நட்டுள்ளார்.

மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரக்கண்ட் மாநிலத்துக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். உத்தம்சிங் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவரை மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வயல்வெளியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மரக்கன்றுகளை நட்டார். அப்போது மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் உடனிருந்தார்.

பல்கலைக்கழகத்தில் உள்ள வயல்வெளியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சேற்றில் இறங்கி நெல் நாற்றுகளை நட்டார். அவருடன் வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகர்ச்சியிலும் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *