கர்நாடகப் போராட்டங்களுக்குப் பின்னால் டி.கே.சிவக்குமார் – பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு.!

கர்நாடகாவில் நடக்கிற அத்தனை போராட்டங்களும் திட்டமிட்டு கர்நாடகா முதலமைச்சர் டி,கே,சிவக்குமார் தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறது என்று மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்கங்கள் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசன பகுதி வறண்டு கிடைக்கிறது, குறுவையை இழந்திருக்கிறோம், சம்பா பயிர் கேள்விக்குரியான நிலையில் உள்ளது  என்றும், தற்போது கேரளாவில் வயநாடு பகுதிகளில் அபரிவிதமான மழை பெய்து, குடகு வழியாக கர்நாடகத்தின் கபினி வழியாக தமிழகம் நோக்கி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது என்றும்,

தற்போது தமிழ்நாட்டிற்கு விடுவிக்க கூடிய காவிரி நீரை கர்நாடகம் குறைத்துவிட்டது என்றும்,  நேற்றைய தினம் காவிரி நீர் பங்கிட்டு ஒழுங்காற்று குழு, நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. வீதம் 15 தினங்களுக்கு தண்ணீரை விடுவிக்க வேண்டும் என ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது,  ஆணையம் ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று உடனடியாக தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும், இந்நிலையில் கர்நாடக  முதலமைச்சர் தண்ணீரை விடுவிக்க மாட்டேன் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ள அவர்,

கர்நாடகாவில் நடக்கிற அத்தனை போராட்டங்களும் திட்டமிட்டு கர்நாடகா முதலமைச்சர் டி,கே,சிவக்குமார் தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறது என்றும் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *