Share Market: புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை!

Advertisements

பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தையில் இந்த உச்சம் இதுவரை இல்லாததாகும்.

மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலைப் பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தையில் இந்த உச்சம் இதுவரை இல்லாததாகும். நேற்று 71.437.19 புள்ளிகள் முடிவடைந்து, இன்று காலை 71,647.66 புள்ளிகளில் தொடங்கியது.

இதுபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று காலை 138.8 புள்ளிகள் உயர்ந்து 21,591.90-ல் வர்த்தகமானது. இதுவும் புதிய உச்சமாகும். நேற்று 21453.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று காலை 21,477.65 புள்ளிகளில் தொடங்கியது.

விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை ஏற்றத்தைக் கண்டன.

மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவைச் சந்தித்தன.

ஆசியாவில் ஷாங்காய் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்த போதிலும் சியோர், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *