Yashika Aannand : உடலோடு ஒட்டிய உடை.. ஓவர் கிளாமரில் மெய்மறந்து போன யாஷிகா!

Advertisements
Advertisements

Actress Yashika Aannand : இப்பொது 25 வயதை நிறைவு செய்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 1998ம் ஆண்டு இந்திய தலைநகர் டெல்லியில் பிறந்தவர் ஆவார்.

டெல்லியில் பிறந்த பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், தனது 18 வது வயது முதல் திரைத்துறையில் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 2016ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்கின்ற திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற “Me Too” முன்னெடுப்பில் பங்கேற்று, தான் நடிப்புத் துறைக்கு வந்த புதிதில், ஒரு இயக்குனர் பட வாய்ப்புக்காகத் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகப் பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகப் பங்கேற்று 98 வது நாளில் 5 லட்சம் ரூபாயுடன் யாஷிகா ஆனந்த் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி, சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே நடந்த ஒரு கோர கார் விபத்தில் சிக்கினார் யாஷிகா ஆனந்த், அதில் இவருடைய தோழி பலியான நிலையில், பல எலும்பு முறிவுகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் யாஷிகா.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *