
லியோ திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பின்னர் விஜய் அவர்கள் வெங்கட் பிரபு உடன் கூட்டணி அமைத்துப் பணியாற்றி வருகிறார்.
மேலும் 90 களின் நட்சத்திரங்கள் பலரை இப்படத்தில் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளார். அது தான் படத்தின் மீது மேலும் சர்ப்ரைஸ் ஐ கூட்டி உள்ளது எனலாம்.
அதன்படி, பிரபு தேவா, பிரசாந்த், ஸ்னேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, மைக் மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி டி வி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த், அஜய் போன்ற பலர் இப்படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
மதன் கார்க்கி வரிகளில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும் ஒரு புறம் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் ஒரு நட்புப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ராஜு சுந்தரம் மாஸ்டர் நடனத்தில் படமாக்கப்பட்டு உள்ளது.
மேலும், பல நாடுகளில் விஜய் 68 படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. தற்போது 40 சதவீத ஷூட்டிங் நிறைவு பெற்று உள்ள நிலையில், விஜய் 68 படத்தை, தளபதியின் பிறந்தநாளைக்கு கொண்டு வரப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் 68 படத்தின் டைட்டில் இது தானென ஒரு பெயர் பரவி வருகிறது. ஆம், “பாஸ்” என்பது தான் டைட்டில் என நம்பிக்கையான சோர்ஸ் மூலமாகத் தகவல்கள் கிடைத்து உள்ளன. மேலும், வருகிற 31 ஆம் தேதி மாலை டைட்டில் அறிவிப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல ஜனவரியில் முதல் சிங்கிள் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.




