
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியலில் இறுதி கட்ட முடிவுகள் எட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் முதன்முதலாக வருகிற 23ஆம் தேதி தனது இறுதி முடிவைஅறிவிக்கிறார். 100 சதவீதம் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவது உறுதியாகி இருக்கிறது இதற்கான அறிவிப்பை அவர் வருகிற 23ஆம் தேதி வெளியிடுவார் என தெரிகிறது.
இதற்கிடையே , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் இந்நாள் தலைவர் நைனார் நாகேந்திரன் ஆகியோர் அதிரடி முடிவுகளில் இறங்கி இருக்கிறார்கள். முதல் கட்டமாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்த பைஜெயந்த் பாண்டா தற்பொழுது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அப்பொழுது தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது . இதில், எடப்பாடி பழனிச்சாமி தனது கருத்தை தெரிவிக்கும் பொழுது தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் பைஜெயந்த் பாண்டாவை மாற்றிவிட்டு வேறு யாரையாவது நியமிக்கலாம் . குறிப்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை பொறுப்பாளராக நியமிக்கலாம் . அவருக்கு தமிழக அரசியல் நிலவரம் நன்கு தெரியும் அது மட்டுமல்லாமல் என்னோடு நெருக்கமானவர்.
தற்போது , எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளின் பேரில் தான் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்த கூட்டம் நடக்கும் பட்சத்தில் நைனார் நாகேந்திரன் , அண்ணாமலை , மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி என பலரும் கலந்து கொள்கிறார்கள்.பாஜகவை பொறுத்தவரையில் இது முக்கியமான ஆலோசனை கூட்டமாக கருதப்படுகிறது .
இதற்கிடையே யாருடன் கூட்டணி சேர்வது என ஏராளமான குழப்பத்தில் இருந்த ஓ பன்னீர்செல்வம் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவரது போர்முழக்கம் எடுபடாத சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி சேரலாம் என்றும் முயற்சி செய்து வந்தார்.இதற்கிடையே புதிய கட்சி தொடங்கலாம் என ஆலோசனையில் இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிமுக மற்றும்பாஜக தரப்பிலிருந்து ஏதாவது பதில் வரும் என காத்திருந்தார்.
இதில் எந்தவித முடிவும் எட்டப்படாததால் தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என மாற்றினார். புதிதாக பெரிய அளவில் கட்சி தொடங்கினால் அதற்கு தனியாக அலுவலகம் மற்றும் பணியாளர்களை அமைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கிளை கழகங்களை அமைக்க வேண்டும் மற்றும் நிர்வாகிகளை அமைக்க வேண்டும் என ஏராளமான பணிகள் இருப்பதால் தற்பொழுது இது லெட்டர் பேடு கட்சியாக உதயமாகி இருக்கிறது என்கிறார்கள்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் ஆலோசனையின்படி ஓ. பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது . மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற மூத்த தலைவர்களின் ஆலோசனையின் படி புதிய கட்சியை தொடங்கி இருக்கும் . ஓ பன்னீர்செல்வம் தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என இறுதி முடிவை எட்டி இருக்கிறார் .
இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் இணைய காத்திருக்கிறார்கள். சமீபத்தில் சின்னத்திரை நடிகர் ஜீவா ரவி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் . தற்பொழுது இவர் பல சின்னத்திரை நட்சத்திரங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்கிடையே டிடிவி தினகரனும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்று பேசப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கான ஆலோசனைகள் செய்து வருகிறார். ஓ பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஜனவரி மாதம் அவர் இந்த முடிவை அறிவிப்பார் என தெரிகிறது.




